பயங்கரவாத தாக்குதல்.. 4 ராணுவ வீரர்கள் பலி

by Staff / 09-07-2024 11:40:25am
பயங்கரவாத தாக்குதல்.. 4 ராணுவ வீரர்கள் பலி

ஜம்முவின் கத்துவா மாவட்டம் மச்சேதி பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via