சபரிமலை மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

by Editor / 17-10-2024 02:56:37pm
சபரிமலை மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

மண்டல பூஜை காலம் தொடங்கவுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். கொல்லம் சக்திகுளங்கரை சேர்ந்தவர் அருண்குமார் நம்பூதிரி. தற்போது கொல்லம் லட்சுமிநாதர் கோயிலின் பூஜாரியாக உள்ளார். சபரிமலை சன்னதியில் குலுக்கல் சீட்டு முறையில் தேர்வு நடைபெற்றது. 24 பேர் கொண்ட பட்டியலில் அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories