இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்

by Staff / 17-10-2024 03:02:20pm
இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்

அதிமுக 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்வதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவையும் புகழ்ந்துள்ளார். மேலும், அதிமுக அரசில் முதல்வராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரே பதிவில் இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அவர் வாழ்த்தியிருக்கிறார்.

 

Tags :

Share via