தொகுதி மறுசீரமைப்பு.. கர்நாடக முதல்வர் கண்டனம்

by Staff / 27-02-2025 05:29:57pm
தொகுதி மறுசீரமைப்பு.. கர்நாடக முதல்வர் கண்டனம்

தொகுதி மறுசீரமைப்பில் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது திசைதிருப்பும் செயல் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் எனவும், மேலும் தொகுதிகளை அதிகரித்தால் இப்போது உள்ள அதே விகிதாச்சாரத்தில் தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via