இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

by Staff / 13-06-2022 12:47:47pm
இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பியூஷ் கோயல் கொரோனா காலத்தில் 7 நாடுகளின் மக்கள் ஆரோக்கியத்தையும் காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக சாடினார் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று பியூஸ் கோயல் கூறினார். எந்த சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் அழுத்தத்தில் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டார் மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுகள் பியூஸ் கோயல் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories