பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு 500 ரூபாய் கூட தர வக்கு இல்லாத ஆட்சி -பிரேமலதா
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுகூட்டம், நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பில் ரூபாய் 2500 ரூபாய் கொடுத்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்களுக்கு இந்த பணம் போதாது 5000 ரூபாய் தர வேண்டும் என்று வாய்க்கூசாமல் பேசியதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் தற்போது வந்த பிறகு 500 ரூபாய் கூட தர வக்கில்லாமல் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது குற்றம் சாட்டினார்.
குறிப்பாக பொங்கல் தொகுப்பில் 2000 ரூபாய் தர வேண்டும் ஆனால் நீங்கள் நிதியில்லை, நிதி இல்லை சொல்கின்ற நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரதும் பெயிரியிலுமே நிதி உள்ளது என விமர்சனம் செய்தார்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் எந்த ஒரு வசதிகளும் இல்லாத காரணத்தினால் தான் தினம்தோறும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என செய்து வருவதாகவும், செம்மரக்கட்டைகளை வெட்டி நம்ம தமிழ்மக்கள் ஆந்திர மாநிலத்தின் உள்ள சிறைச்சாலையில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள் எவ்வளவு அனுபவித்து வருகிறார்இள் எனவும், அதற்கு காரணம் திருவண்ணாமலை வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஆந்திர மாநிலத்தில் சென்று செம்மரகட்டை வெட்டும் நிலைமையை ஏற்படுத்தியது இந்த ஆட்சியாளர்கள் தான் என்றும், வெறும் வாய் வார்த்தை பேசி வரும் ஆட்சியாளர்கள் மத்தியில் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்று பாதுகாவலனாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேரடியாக சென்று நிதி உதவிகளை வழங்கி அவர்களது துயரில் பங்கேற்று உண்மையான தெய்வமாக சாட்சியாக வாழ்ந்தவர் நமது கேப்டன் என்றும், செம்மர கட்டையை வைத்து இன்றைக்கு படம் ஒன்று எடுத்துள்ளார்கள் புஷ்பா பாகம் 1, புஷ்பா பாகம் 2 என்று ஆனால் உண்மையான புஷ்பா நம்ம கேப்டன் விஜயகாந்த் என்று மேடையில் கைகளால் செய்கை செய்து சூளுரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி மேடையிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு 500 ரூபாய் கூட தர வக்கு இல்லாத ஆட்சி -பிரேமலதா