இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் மனிஷ் தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்று கொண்டிருந்த பொழுது இருந்து கடற்கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பதிவு எண் இல்லாத நாட்டுப் படகில் சோதனையிட்டனர். அதில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 520 கிலோ கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும். இதனை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து படகில் இருந்த பூபால்ராயபுரம் 12வது தெருவைச் சேர்ந்த மார்ட்டின் மகன் அந்தோணி (48), லூர்தம்மாள்புரம் சேசையா மிஷிசியர் மகன் சிக்காலிகாகன் (46), பாத்திமா நகர் முத்தையா மகன் மார்ட்டின் (32), குருஸ்புரம் பீட்டர் மகன் அந்தோணிசாமி (58), பாத்திமா நகர் கரோல் (29), பூபால்ராயபுரம் ஜோசப் மகன் கெபிஸ்டன் (32) ஆகிய 6பேரையும் கைது செய்து 6 தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகில் சுங்க த்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :