மனைவி கண்முன்னே கணவன் பலி

தூத்துக்குடி அருகே உள்ள குலையன் கரிசல் கிராமம் கே. பாண்டியா புரத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஷங்கர் (39), இவர் நேற்று தனது மனைவி முத்துலட்சுமியுடன் தூத்துக்குடிக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். கூட்டம்புளியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வரும்போது எதிரே வந்த ஒரு லோடு ஆட்டோ பைக் மீது மோதியதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொ) அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சங்கர் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த புதுக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கோபால் மகன் கற்குவேல் அய்யனார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :