ஒடிசா மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநில கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் டிரௌமா கேர் பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகாலை 2:30 முதல் 3:00 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக முதற் கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.. தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும், நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற 11 மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்துதலா ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரண உதவி அறிவித்துள்ளார். ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு ஒடிசா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
Tags :


















