கையில் வைத்திருந்த மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ஒரு நபர் கையில் வெடிகுண்டு போன்ற பொருளை வைத்திருந்தார். அவர் கையில் இருந்த போதே அது திடீரென வெடித்துவிட்டது" என்றனர். குண்டுவெடிப்பில் அவரது கால்கள் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :