ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு

கேரளாவின் திருவனந்தபுரம் அடுத்த வக்கோமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 2 குழந்தைகளை கொன்று விட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :