"திமுவிற்கு சோதனையான நேரத்தில் அரணாக மதிமுக இருக்கும்" வைகோ

திமுவிற்கு சோதனையான நேரத்தில் மற்றொரு அரணாக மதிமுக இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "2026 தேர்தலில் கூட்டணியாக திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் உடன்பாடு கொள்கிறோம். மதிமுக 8 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் தொகுதிகளை கேட்போம். அதிமுக திராவிட இயக்க கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதனால் அதை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Tags :