ரயில்வே துறைக்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் ரயில்வே துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவர்களும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்" என்று பதிவிட்டுள்ளார்.
Tags :