தேவைக்கும் ஆசைக்கும் புரிதல் தேவை: ஆர். பி. உதயகுமார்

by Staff / 03-08-2024 02:14:56pm
தேவைக்கும் ஆசைக்கும் புரிதல் தேவை: ஆர். பி. உதயகுமார்

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவராக நெல்லை பாலு, செயலாளராக கதிரவன், பொருளாளராக சண்முகம் ஆகியோர் பதவி ஏற்றனர்.விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, நடிகர் வையாபுரி ‌மண்டல ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், உதவி கவர்னர் கண்ணன் ரோட்டரி சங்க ஆலோசகர் அழகப்பன் ஆகியோர் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் கலந்து கொண்டு பேசினார் 
இங்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு இருக்கிறது. உண்மையிலே சேவைமனப் பான்மையை கொண்டிருக்கிற சேவைக்கு என தன்னை அர்ப்பணித்திருக்கிற இவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்நாள் சாதனையாளர்கள் விருது எப்படி வழங்கினார்கள் என்றால் தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரித்து கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் வழங்கியுள்ளார்கள்.

சேவையில் கிடைக்கிற இன்பம் வேற எதிலும் கிடைப்பதில்லை. பிறருக்கு கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைப்பதில்லை. சேவையை நோக்கமாக, கொள்கையாக, லட்சியமாக, அடித்தளமாக கொண்டால் வாழ்க்கை வலிமையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

 

Tags :

Share via