இந்த விஜய் ஊழல்செய்யமாட்டான்,ஒரு பைசா கூட தொடமாட்டான்-
இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார், அவர், முன்னாள்- இந்நாள் ஆட்சியாளர்கள் போல் நான் ஊழல் செய்ய மாட்டேன் .ஒரு துளி கூட என் மீது கறை படிய விடமாட்டேன். ஒரு பைசாவை கூட நான் தொட மாட்டேன். அதை தொட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்ததோடு திமுகவை ஊழல் சக்தி என்றும் அதிமுகவை சரண் அடைந்த சக்தி என்றும் அவர் இந்த இரு கட்சிகளும் தமிழகத்தை ஆளக்கூடாது என்று பேசியதோடுl தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற பயத்தை உருவாக்க வேண்டும் என்றும் தான் அண்டிப்பிழைப்பதற்கோ அல்லது யாருக்கும் அடிமையாக இருப்பதற்கு அரசியலுக்கு வரவில்லை என்றும்இது சினிமாக்களமல்ல முதல்வன் படத்தில் வருவது போல் ஒரே நாளில் அனைத்தையும் மாற்ற முடியாது .ஆனால், நம் கண் முன் நடக்கும் ஊழலை பார்த்துக் கொள்ள முடியாது அதனை ஒழிப்பதற்கான தொடர்ந்து பணிகளை நாம் செய்ய இருக்கிறோம் என்றும் நான் மட்டும் சுத்தமாக இருந்து பயனில்லைl நீங்களும் அது போன்று இருக்க வேண்டும். நீங்கள் அப்படி இருக்கிறீர்கள், இருந்தாலும் அது போன்று இனி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.வரயிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு ஜனநாயகப் போர் என குறிப்பிட்டு அவர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Tags :













.jpg)





