காவல்துறை வாகனத்தின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி மர்மக்கும்பல் தாக்குதல்

by Admin / 25-01-2026 05:14:08pm
காவல்துறை வாகனத்தின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி மர்மக்கும்பல் தாக்குதல்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இறையூர் கிராமம் என்று அழைக்கப்படுகிற திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே இரண்டு கார்களில் வந்த மர்மக்கும்பல் விசாரணைக் கைதிகளை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனத்தின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்கியது. இந்த தாக்குதல் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளை காளி என்ற பிரபல ரவுடியை கொல்லும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக தெரிகிறது மதுரையைச் சேர்ந்த இவர் மீது ஒன்பது கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இத்தாக்குதலில் மூன்று அல்லது நான்கு காவலர்கள் காயம் அடைந்துள்ளனர் காயமடைந்த காவலர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தகவலின்படி அவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் காவல்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்நிலையில் ,தற்காப்புக்காகவும் கைதி தப்பிப்பதை தடுக்கவும் காவல்துறை உதவி ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து அந்த கும்பல் தப்பி சென்றது.  காவல்துறை வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்ப கும்பலை பிடிக்க ஐந்து தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மர்ம நபர்கள் பயன்படுத்திய காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories