த வெ க மாவட்ட செயலாளர் இல்ல புதுமனை புகுவிழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விவகாரம்.

தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் கே பாரதிதாசனின் இல்ல புதுமனை புகுவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது, இதில் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அமைச்சருக்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் உற்சாக வரவேற்பு அளித்துமயிலிறகு மற்றும் ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார், இந்த விவகாரம் அரசியலில் பேசும் பொருளாக மாறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதற்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.அந்தக்கடிதத்தில்
புது மனை புகு விழாவிற்கு நம் கழக சொந்தங்கள் அனைவரும் அழைத்தேன் அதேபோன்று எனது குடும்ப நண்பரான மாற்றுக் கட்சி அமைச்சர் அவர்களையும் அழைத்தேன், குடும்ப நண்பர்கள் என்பதால் அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்து விட்டேன் இச்செயலுக்கு நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் இனிவரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நான் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளித்து இதுபோன்ற நிகழ்வில் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்...
Tags : த வெ க மாவட்ட செயலாளர் இல்ல புதுமனை புகுவிழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விவகாரம்...