ஆப்கானிஸ்தான்   ராணுவ அமைச்சர் வீட்டின் மீது  பயங்கரவாதிகள்  தாக்குதல்:12 பேர் சாவு 

by Editor / 05-08-2021 05:18:47pm
ஆப்கானிஸ்தான்   ராணுவ அமைச்சர் வீட்டின் மீது  பயங்கரவாதிகள்  தாக்குதல்:12 பேர் சாவு 



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதியின் வீட்டில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அதை பிஸ்மில்லா கான் முகமதியின் வீட்டின் முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர்.
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது.‌ அதன் பின்னர் மற்றொரு காரில் துப்பாக்கிகளுடன் வந்து இறங்கிய 4 பயங்கரவாதிகள் பிஸ்மில்லா கான் முகமதியின் வீட்டை சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டனர். இதற்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையில் சுமார் 5 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.


 இறுதியில் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டு கொல்லப்பட்டனர்.அதேவேளையில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒரு பெண் உள்பட அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலின் போது ராணுவ அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதி வீட்டில் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோல் அவரது குடும்ப உறுப்பினர்களும் ராணுவ வீரர்களால் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.இதனிடையே ராணுவ அமைச்சரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

Tags :

Share via