கஞ்சா விற்பனை  விற்பனையில் ஈடுபட்ட இளம் சிறார் உட்பட 3 நபர்கள் கைது‌.

by Editor / 24-05-2024 11:03:12pm
கஞ்சா விற்பனை  விற்பனையில் ஈடுபட்ட இளம் சிறார் உட்பட 3 நபர்கள் கைது‌.

அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த்  (பொறுப்பு) தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மன்னார் கோவில் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(24), வெள்ளாங்குழி, கங்காதேவி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கங்காதரன்(24) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேற்படி காவல் ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்தும், ஒரு இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தார்.

 

Tags : கஞ்சா விற்பனை  விற்பனையில் ஈடுபட்ட இளம் சிறார் உட்பட 3 நபர்கள் கைது‌.

Share via