கஞ்சா போதையில் சாமியார்கள் அட்டகாசம்.. போலீசார் சோதனை

by Staff / 13-10-2024 05:10:40pm
கஞ்சா போதையில் சாமியார்கள் அட்டகாசம்.. போலீசார் சோதனை

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு 500-க்கும் மேற்பட்ட சாமியார்கள் அங்கேயே யாசகம் பெற்று வசித்து வருகிறார்கள். கஞ்சா போதையில் அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டுவது, மக்களிடம் தகராறு செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக சில சாமியார்கள் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் இன்று (அக் 13) போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via

More stories