கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்.. 2 பேர் கைது

by Staff / 13-10-2024 05:13:04pm
கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்.. 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தும்பராம்பட்டு, வெள்ளரிக்காடு ஆகிய கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது 60 லிட்டர் கள்ளச்சாராயம், 100 லிட்டர் சாராய ஊரல் பிடிபட்டது. லாரி டியூப், பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் இறந்த பிறகும் இந்தசம்பவம் நடந்துள்ளது.

 

Tags :

Share via

More stories