திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடும் பனி பொழிவு-பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,

by Editor / 18-12-2022 09:34:40am
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடும் பனி பொழிவு-பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் திருவாரூர் சேந்தமங்கலம் மாங்குடி திருத்துறைப்பூண்டி மணலி கமலாபுரம் சிங்களாந்தி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் மார்கழி மாதம் பிறப்பையொட்டி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலை முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடுமையான பனிப் பொழிவின் காரணமாக கோவிலுக்குச் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள்  பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

 

Tags :

Share via

More stories