"எலான் மஸ்க்கிற்கு பதவி” - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆக. 13-ம் தேதி எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் வலைத்தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. இந்த நேர்காணலில், அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மஸ்க்கிற்கு தனது அமைச்சரவையில் துறை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.
Tags :