நாட்டின் முதல் தானியங்கி காரை வடிவமைத்த எம்.ஐ.டி மாணவர்கள்

by Editor / 15-08-2021 06:51:12pm
 நாட்டின் முதல் தானியங்கி காரை வடிவமைத்த எம்.ஐ.டி மாணவர்கள்

எம்.ஐ.டியில் இறுதியாண்டு இயந்திர பொறியியல் பயிலும் மாணவர்கள், தானியங்கி நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கி உள்ளனர்.


இந்த வாகனத்தின் செயல்முறை விளக்கத்தை, எம்.ஐ.டி. மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்களுக்குச் செய்து காட்டினர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தானியங்கி கார் என்ற பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது.இந்தத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் யாஷ் கேஸ்கர், சுதன்ஷு மனேரிகர், செளரப் டாமக்லே, சுபாங் குல்கர்னி, ப்ரத்யாக்ஷா பாண்டே, பிரேர்னா கோலிபகா ஆகியோர் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள், இறப்புகளைக் குறைக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் கொண்டு இந்த காரைத் தயாரித்ததாகக் கூறினர்.

 

Tags :

Share via