ஹைதியில்பயங்கர நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி
கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி என்ற பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியது என்பதும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இடிபாடுகளுக்கு இடையே சுமார் 300க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு பணிக்கு பின்னர் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் 7.2 என்ற மிக அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்து பதட்டத்துடன் இருக்கும் காட்சிகளிலும் கூடிய வீடியோக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஹைதி தீவில் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Tags :