கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி 158 பேர் பலியாகியுள்ளதாக மத்திய அரசு தகவல்.

by Editor / 22-12-2021 12:05:18am
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி 158 பேர் பலியாகியுள்ளதாக மத்திய அரசு தகவல்.

மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொடுமையால் ஆண்டுதோறும் பல துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக துப்புரவுத் தொழிலாளிகள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி மரணம் அடைகின்றனர்.

உரிய உபகரணங்களின்றி சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை, துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது சட்டப்படி குற்றமாகும். எந்திரங்களின் மூலம் தான் சாக்கடைகள் சுத்தப்படுத்த வேண்டும். 2013-மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது.ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.கடந்த மூன்றாண்டுகளில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு 158 பேர் பலியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  

 

Tags :

Share via