மணிப்பூரில் நிலநடுக்கம்
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நோனி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நோனி பகுதியில் 25 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) கண்டறிந்துள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அம்மாநில மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று கர்நாடகாவிலும், கடந்த வாரம் சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :



















