டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறை பார்கள் மூட உத்தரவு

by Editor / 19-04-2021 07:42:06pm
டாஸ்மாக் கடைகளில் மீண்டும்  டோக்கன் முறை பார்கள்  மூட உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரித்து வருவதால்  இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் எனவும் இரவு 9 மணிக்கே மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் உடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவு.பிறப்பித்துள்ளது. மேலும் இன்று முதல்  மதியம் 12 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories