பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 18-12-2023 10:51:14pm
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். நாளை நண்பகல் 12 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமரை நேரில் சந்திக்க ஸ்டாலின் டெல்லி சென்றடைந்துள்ளார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணி கூட்டத்திலும் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

 

Tags : பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Share via