ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம்தான் - சரத்குமார்

by Staff / 13-12-2022 01:43:36pm
ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம்தான் - சரத்குமார்

ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம்தான், விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு. அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும்.ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான், தோனி என அனைவரும்தான் நடிக்கின்றனர். நான் ஒரு அரசியல்வாதியும் கூட, ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன்; ஆனால், மக்கள் எனக்கு ஓட்டு போடுவதில்லை, அப்படி இருக்கும்போது நான் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo