வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு  வழக்கில்  தீர்ப்பு

by Editor / 24-08-2021 05:29:19pm
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு  வழக்கில்  தீர்ப்பு


கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு குறித்த முக்கிய தீர்ப்புக்கான தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி  சட்டமன்றத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்து சட்டம் நிறைவேற்றினார். அதன் பிறகு இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு அதிமுக -வின் ஆட்சி முடிய சில நாட்களே இருந்த போது கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


இது அரசியல் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்ட அறிவிப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தனர். இதனை அடுத்து, நீதிமன்றத்தில் இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் இடம் பெற்றிருந்தனர். வாதம் தொடங்கப்பட்ட போது, 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.


இதனை அடுத்து, இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இதன் அடிப்படையில் தற்போது அரசு சார்ந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதால், இதற்கு இடைக்கால தடை விதித்து இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். மேலும், இந்த அறிவிப்பால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கின் முக்கிய தீர்ப்பு குறித்த விவரங்கள் குறித்த தேதி  வெளியிடப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

 

Tags :

Share via