மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

by Editor / 29-10-2024 09:21:22am
மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

 செங்கோட்டை  காவல் நிலைய எல்கைக்குட்பட்ட வல்லம் புரோட்டா கடையில் பிரச்சனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட  குற்றவாளியான வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் சுபாஷ்கண்ணா(26),  புளியரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை மாடக்கண்ணு தெருவை சேர்ந்த வைரவநாதன் என்பவரின் மகன் லிங்கராஜ் (33) மற்றும் புளியங்குடி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான ரத்தினபுரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகனான ஷாஜி (45) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி  நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

Share via