ஆணையர் அருண் மீதான வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

by Editor / 13-03-2025 03:50:30pm
ஆணையர் அருண் மீதான வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

சென்னை காவல் ஆணையர் அருண் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், “வாராகி மீதான வழக்கில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதியப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் அருண் மீது நடவடிக்கை தேவை” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 13) நடந்த வழக்கு விசாரணையில், “காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது” என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via