சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் புயல்...

by Staff / 04-12-2023 01:47:55pm
சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் புயல்...

சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 90 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வரை வீசக்கூடும் எனவும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி முற்பகல் ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கடக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo