கே. என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் முதலமைச்சரும் தி,மு,க தலைவருமான மு. க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

by Admin / 05-09-2026 02:03:34pm
 கே. என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் முதலமைச்சரும் தி,மு,க தலைவருமான மு. க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

முன்னாள் அமைச்சரும் தி.மு.க முதன்மைச்செயலாளருமான கே .என். நேரு இல்லத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனைக்கு தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் களத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அவர் இது குறித்து,

உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் தற்போதைய சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது எனவே முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு மீதான இந்த சோதனை நடவடிக்கையை தமிழக வெற்றிக்கழக அரசு மேற்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

Tags :

Share via

More stories

Logo