வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Editor / 26-04-2025 01:08:13pm
வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. வலுக்கட்டாய கடன் வசூலால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். கடன் பெற்றவரையோ அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்” என்றார்.

 

Tags :

Share via