ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்கும் உத்தரவு நீதிமன்றம் இடைக்கால தடை

by Editor / 11-07-2022 04:24:41pm
ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்கும்  உத்தரவு நீதிமன்றம் இடைக்கால தடை

 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த ஷாஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம் வெளிநாட்டு மாடுகள் கலப்பின மாடுகளை பங்கு ஏற்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

 

Tags :

Share via
Logo