சிதம்பரம் நடராஜர் குழந்தை திருமண வீடியோ வெளியானது

by Staff / 05-06-2023 06:10:58pm
சிதம்பரம் நடராஜர் குழந்தை திருமண வீடியோ வெளியானது

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து கொண்டதாகக் கருதப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தீட்சிதர்களின் குடும்பத்தில் ‘பால்ய விவாகம்’ எனப்படும் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசுக்கு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் கூறி வந்தனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்ப சிறுவனுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via