சென்னை - மதுரையில் ரூ. 180 கோடி போதைப் பொருள் பறிமுதல்

by Staff / 02-03-2024 12:25:43pm
சென்னை - மதுரையில் ரூ. 180 கோடி போதைப் பொருள் பறிமுதல்

சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் மதுரை ரயில் நிலையத்தில் இறங்கினார். ரகசிய தகவலின்பேரில் அவரை சுற்றிவளைத்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவரிடம் நடத்திய சோதனையில், போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
விசாரணையில், அவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் பிரகாஷ் (42) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 30 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அவர் கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் சென்னை விரைந்தனர். அதற்குள் பிரகாஷின் மனைவி வீட்டிலிருந்த போதைப் பொருள் பாக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அவை கொடுங்கையூர் குப்பைமேட்டுக்கு போய்விட்டன. தொடர்ந்து, அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், 6 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 180 கோடியாகும்.

 

Tags :

Share via

More stories