காஷ்மீரில் பாதுகாப்புப் படை சுட்டு 2 பயங்கரவாதிகள் பலி

by Editor / 24-07-2021 06:22:18pm
 காஷ்மீரில் பாதுகாப்புப் படை சுட்டு 2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமைகாலை பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.


காவல்துறைக்கு தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்த நிலையில் ஷோக்பாபா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தவர்கள் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்தனர்.
இதை எதிர்பார்க்காத தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை தொடர்ந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் இறுதியில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பலியான இருவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பதால் அதை பற்றிய விசாரணையில் இருப்பதாகவும் அங்கிருந்து சில ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.


கடந்த 5 நாட்களில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவது இது 3வது முறையாகும். சோப்பூர் கிராமத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இதில் ஒருவன் கம்மாண்டர். தெற்கு காஷ்மீரில் ஜானிப்போரா பகுதியல் 4 போலீஸ்காரர்களை 2018ல் இவன் சுட்டுக் கொன்றான்.

 

Tags :

Share via

More stories