லாரி மீது மினி டெம்போ லாரி மோதி 4 பேர் பலி

by Editor / 25-05-2022 08:46:22am
லாரி மீது மினி டெம்போ லாரி மோதி 4 பேர் பலி

சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் (38) கற்பகவல்லி (27) மிதுன் (3) லிங்கேஸ்வரன் (28) உள்ளிட்ட 7 பேர் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு மினி டெம்போ லாரியில் தளகற்கள் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.அப்போது சிதம்பரம் புறவழிச்சாலையில்  கொண்டிருந்த போது அந்த வாகனம் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில் மினி டெம்போ லாரியின் முன் பக்கத்தில் அமர்ந்து இருந்த  செல்வகுமார், கற்பகவல்லி, மிதுன், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மினி டெம்போ லாரியின் பின்னே அமர்ந்திருந்த 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் காயம்பட்ட 3 பேரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.


இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிபலியானவர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறு  பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு விசாரணை  மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : Mini tempo truck collides with truck, 4 killed

Share via