டெல்லி ஹோட்டல் தீ பரவியது இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி மாளவியா பகுதியில் உள்ள புளோரிஸ் பி - பி ஹோட்டலில் காலையில் ஹோட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் காலை 8:30 மணியளவில் திடீரென தீப்பிடித்து கட்டடம் முழுவதும் தீ பரவியது இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பான்மையினர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள். உயிரிழந்த வெளிநாட்டவர்கள் வங்கதேசம்,நைஜீரியா, லைப்ரியா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் . உயிரிழந்த வெளிநாட்டினர் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளி உறவினர்களுக்கு உதவியாளர்களாக வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து 40க்கும் மேற்பட்டோரை மேட்டு எய்ம்ஸ் சத்தர் ஜங்க் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். ஆறு அறைகள் மட்டுமே உரிமை பெற்று ஹோட்டலை சட்ட விரோதமாக நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. கட்டடத்தில் வெளியேறுவதற்கான ஒரே ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. ஹோட்டல் ஜன்னல்கள் அனைத்தும் நிரந்தரமாக சீல் வைக்கப்பட்டிருந்ததாலும் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் இல்லாதாலும் பலர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இதில் பலர் உயிர் பிழைப்பதற்காக மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது. ஹோட்டல் உரிமையாளர் லவ் கேஸ் பஜாஜ் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மீது மரணத்தை விளைவித்தல் பிரிவின்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தின் காரணமாக டெல்லி மாநகராட்சி விதிமீறல் மற்றும் அனுமதி அற்ற வணிக கட்டடங்களை சீல் வைக்கும் சோதனையை மேற்கொண்டு வருகின்றது.
Tags :


















