பில்கேட்ஸ் நாளை இந்தியா வருகிறார்

by Staff / 27-02-2024 12:31:35pm
பில்கேட்ஸ் நாளை இந்தியா வருகிறார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ பில்கேட்ஸ் இம்மாதம் 28ஆம் தேதி இந்தியா வருகிறார். ஒடிசாவின் புவனேஸ்வரில் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தை அவர் பார்வையிடுகிறார். இதற்கு 'கிருஷி பிரகிஷ்ய கேந்திரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த மையம் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனம் செய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories