திருநம்பிகளுக்கான அறுவைசிகிச்சை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை
தென் தமிழகத்தில் முதன்முறையாக பட்டதாரி இளம்பெண்கள் இருவருக்கு மாற்றுபாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை செய்து திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள திருநம்பி, திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவில் வியாழன்தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.
இந்த பிரிவில் 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர். 10 பேர் மூன்றாம் பாலின அறுவைசிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளனர். இந்த சிறப்பு பிரிவில் செயற்கை மார்பகம், ஆணுறுப்பு பொறுத்துதல் குரல்மாற்றம், லேசர் மூலம் முடி நீக்கம் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags :