அஜித்குமார் வழக்கு: “மக்களை ஏமாற்ற முடியாது” - வானதி சீனிவாசன்

திருபுவனம் காவலாளி அஜித்குமார் கொலையில் அரசியல் தலையீடு இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே இந்த கொலை சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அவர் ஏதோ எதிர்க்கட்சித் தலைவரை போல, காவல்துறைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல, காவல்துறை மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். நாடகங்களை அரங்கேற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :