பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவு.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதியம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவு.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் காலை முதல் பரவலான மழை பெய்து வந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடியில் உள்ள மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது தென்காசியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல் ஈஸ்வரர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவு.