குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தென்காசி மாவட்டத்தில் நாளை கனமழை கன எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான முதல் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் போலீஸாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை வெளியேற்றி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தடையானது இன்று மற்றும் நாளை தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.