கோவிலுக்குள் சென்றவரை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்

by Staff / 30-01-2023 01:59:29pm
கோவிலுக்குள் சென்றவரை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்

சேலம் மாவட்டம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை, ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி, திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நுழைந்ததாகக் கூறி, திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், பெண்கள், முதியவர்கள் என பொதுமக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி மோசமாக நடத்துகொண்டுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo