ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தம்

by Staff / 12-08-2023 02:09:53pm
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தம்

தக்காளி விலை அதிகமாக இருந்ததால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டது. இந்நிலையில், விலை குறைந்ததால் அனைத்து ரேஷன் கடைகளில் தாக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி, ரூ.45 முதல் 50க்கு விற்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது. சென்னையில் முதல் ரக தக்காளி ரூ. 50க்கும், 2ஆம் ரக தக்காளி ரூ.30-40க்கும், 3ஆம் ரக தக்காளி விலை ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via