இன்று காலையில் இருந்தே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

by Admin / 22-05-2026 05:41:22pm
இன்று காலையில் இருந்தே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இன்று காலையில் இருந்தே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. விடுதலை சிறுத்தை கட்சி ,இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு,ஷாஜகான் இருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்ற நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவின் வலைதள பதிவு பெரும் அதிர்வலையை உருவாக்கியது. பல்வேறு தரப்பிலிருந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அவர் பதிவிட்டு இருப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. எதிர்ப்புக் குரல்கள் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் பொருளாளர் பாலாஜி வெளிப்படுத்தி இருந்தார். வார்த்தைப் போர்கள் தடித்து வருகிற நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியில் பங்கெடுப்பது அவர்களுடைய நிலைப்பாடு என்றும் அதனால் தேவையற்ற கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆ. ராசா தன்னுடைய பதிவை நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து வாதிட்டு வரும் வேலுமணி பத்திரிகையாளர் சந்திப்பில், பதவிக்காக பணத்திற்காக தாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு நல்கவில்லை என்றும் தங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி தான் என்று சொன்னதோடு பொதுக்குழுவை கூட்டி கட்சியினுடைய தோல்விக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும் என்பதுதான் நாங்கள் வலியுறுத்தினோமே தவிர அவருக்கு எதிராக தாங்கள் நடக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியதோடு சமூக வலைதளங்களில் ஊடகங்களில் தாங்கள் பதவிக்காக பணத்திற்காக வாக்களித்ததாக தவறான செய்திகளை இனிமேல் பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்..

இன்று காலையில் இருந்தே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
 

Tags :

Share via

More stories

Logo